பணம் செலுத்தாத காரணத்தால், சிகிச்சையை நிறுத்தியதாக தனியார் மருத்துவமனை மீது புகார்

புதுச்சேரியில் தனியார் மருத்துவமனையில் பணம் செலுத்தாத காரணத்தால், சிகிச்சையை நிறுத்தியதாகவும், இதனால் பெண் உயிரிழந்ததாகவும் கூறி, உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

கிருமாம்பாக்கத்தில் உள்ள மகாத்மா காந்தி தனியார் மருத்துவமனையில், வயிற்றுவலி காரணமாக 2 வாரங்களுக்கு முன், பாகூரை சேர்ந்த புவேஷினி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், புவேஷினி உயிரிழந்ததற்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் என்று கூறி, உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சிகிச்சைக்கான கட்டணத்தை செலுத்தாததால், புவேஷினிக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை நிறுத்தப்பட்டதாகவும், அதனால் தான் அவர் உயிரிழந்ததாகவும் குற்றம் சாட்டினர். இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறியதால் மறியல் கைவிடப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன