பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிரொலி – மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முதலீடுகளில் நாட்டம் அதிகரிப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எதிரொலியாக, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மியூச்சுவல் ஃபண்டுகளின் நிர்வாக சொத்து மதிப்பு 93 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.

ரிசர்வ் வங்கி 2 ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, மியூச்சுவல் ஃபண்டுகள், காப்பீடுகள், வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கிகளில் டெபாசிட்டுகள் அதிகரித்து வட்டி விகிதம் குறைவதற்கு வழிவகுத்தன. இதனால், மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற நிதிமுதலீட்டுச் சாதனங்களை நாடுவது அதிகரித்துள்ளது.

மியூச்சுவல் ஃபண்டுகளின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துமதிப்பு கடந்த மார்ச் மாத இறுதிக்குள் 17.5 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இது மேலும் அதிகரித்து ஜூலை மாத இறுதிக்குள் 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன