பணத்தகராறில் வடமாநில இளைஞர் கொலை

சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் பணத்தகராறு காரணமாக நண்பரை கொலை செய்த வடமாநில இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

திரிபுரா மாநிலத்தை சேர்ந்த தல்வார், சித்திக்மியா ஆகியோர், சோழிங்கநல்லூர் நேரு தெருவில் ஒன்றாக தங்கி அதே பகுதியில் வேலை பார்த்து வந்தனர். தல்வார் கொடுத்த வீட்டு வாடகை பணமான மூவாயிரம் ரூபாயை சித்திக்மியா செலவழித்து விட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த சித்திக்மியா, கத்தியால் சரமாரியாக தல்வாரை குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். தகலவறிந்த வந்த போலீசார் உடலை மீட்டதுடன், தப்பி ஓடிய சித்திக்மியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன