பட்டாசு குடோனில் தீ விபத்து, தூக்கி வீசப்பட்டு இருவர் மரணம்

திருப்பதி அருகே, பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், இரண்டு பேர் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். ரேணிகுண்டா காட்டன் மில் எதிரே, பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ள கிடங்கில் பட்டாசுகள் அடுக்கி வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு பட்டாசு கிடங்கி தீ விபத்து ஏற்பட்டு வெடித்துச் சிதற ஆரம்பித்துள்ளன. இதில், கிடங்கில் இருந்த இருவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்துவிட, பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பணி முடிந்து தொழிலாளர்கள் வீடு திரும்பிவிட்டதால், பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. மீட்பு பணிகளில் தீயணைப்பு துறையினரும் பொதுமக்களும் ஈடுபட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன