Advertisement

படப்பிடிப்பு வழக்கம் போல் நடைபெறும் – தயாரிப்பாளர் சங்கம்

திரைத்துறையைச் சேர்ந்த ஃபெப்ஸி தொழிலாளர்கள் செவ்வாய் கிழமை முதல் வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், படப்பிடிப்பு வழக்கம் போல் செயல்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவரும், நடிகருமான பிரகாஷ் ராஜ், பெப்சி தொழிலாளர்களுடன் தயாரிப்பு சங்கத்தினர் சேர்ந்து வேலை செய்ய போவதில்லை என கூறவில்லை என்றார். ஃபெப்ஸி தொழிலாளர்கள் பணிக்கு வந்தாலும், அவர்களுக்கு பணி வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

மேலும், தற்போதுள்ள சூழலில் அதிகப்படியான சம்பளத்தை தயாரிப்பாளர்களால் கொடுக்க இயலாது என்று கூறிய அவர், பேட்டா என்ற பெயரில் ஒப்பந்தத்தை மீறி பன்மடங்கு வரை பயணப்படி உள்ளிட்டவற்றை உயர்த்திக் கேட்டால் எப்படி வழங்குவது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன