Advertisement
Advertisement

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மூத்த பத்திரிக்கையாளர், தாயாருடன் கொலை

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆப் இந்தியா, டிரிபுயுன் உள்ளிட்ட பத்திரிக்கைகளில் பணிபுரிந்த கே.ஜே. சிங், மொகாலியில் தமது 92 வயது தாயாருடன் வசித்து வந்தார். நேற்று அவரது வீட்டுக்கு வந்த கே.ஜே.சிங்கின் சகோதரி, தமது சகோதரரும், தாயாரும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கே.ஜே.சிங் கழுத்தறுக்கப்பட்டும், அவரது தாயார் கழுத்து நெறிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

கார் மற்றும் தொலைக்காட்சி திருடு போயுள்ளதால், கொள்ளைச் சம்பவத்தின் போது கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன