பசுப்பாதுகாவலர்கள் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டால் நடவடிக்கை – மோடி

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடருக்கு முன்னதாக டெல்லியில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகளுக்கு மதச்சாயம் பூச முயற்சிகள் நடைபெறுவதாக கூறியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கையாள வேண்டியது மாநில அரசுகள் என்பதை சுட்டிக்காட்டிய மோடி, பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜி.எஸ்.டி.-க்கு ஆதரவளித்து கூட்டாட்சித் தத்துவத்துக்கு வலு சேர்த்த அனைத்து கட்சியினருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!