பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரசிடம் இருந்து உ.பி மக்கள் விடுபட வேண்டும் – பிரதமர் மோடி!

சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் காங்கிரசிடம் இருந்து விடுபட்டால்தான் உத்தர பிரதேசம் முன்னேறும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலையொட்டி, ஹர்டோய், பாரபங்கி ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசிய அவர், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சிகள் தங்கள் நலனுக்காகவே அரசியல் செய்து வருகின்றன என்றார். ஓட்டு வங்கியை எப்படி அதிகரிக்கலாம் என்றே சிந்திக்கும் இந்த கட்சிகளிடம் இருந்து விடுபட்டால்தான் உத்தரபிரதேசம் முன்னேறும் என்று அவர் கூறினார். பா.ஜனதாவுக்கு முழு பெரும்பான்மை அளித்தால், உத்தரபிரதேசம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபடுவதற்கான வழிகளை தாம் காட்ட முடியும் என்று மோடி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன