Advertisement
Advertisement

நொய்யல் நதியில் மீண்டும் கலக்கப்படும் சாயக் கழிவுகள்

திருப்பூர் நொய்யல் நதியில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், மீண்டும் சாய ஆலைகளின் கழிவு நீர் கலக்க ஆரம்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த கனமழையின் காரணமாக திருப்பூர் நொய்யல் நதியில் வெள்ளம் ஏற்பட்டது.

அப்போது மழை வெள்ளத்தோடு, சிலற் சாயபட்டறை கழிவுகளை திறந்து விட்டனர். இதனால் நுரை பொங்கி சென்ற நொய்யலை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை மக்கள் குளிக்க பயன்படுத்தும் சோப்பால் தான் ஆற்றில் நுரை வந்தது என சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறியிருந்த நிலையில், நொய்யல் ஆற்றில் சாய கழிவுகளை கலந்ததாக 23 சாய ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலை நொய்யல் நதியில் மீண்டும் சாய கழிவு நீர் கலந்தோடியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் யூனியன் மில் பகுதியில் பட்டப்பகலிலேயே சிலர், நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறை கழிவுகளை திறந்து விட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன