நேரம் வரும் போது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.க்கு பதிலடி – லாலு பிரசாத்

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.க்கு தகுந்த நேரத்தில் பதிலடி கொடுக்கப் போவதாக பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். ஆயிரம் கோடி ரூபாய் நில மோசடி தொடர்பாக அவரது உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 22 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த லாலு பிரசாத், பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்.உம் இணைந்து தமது பெயரையும், தமது கட்சியின் பெயரையும் சீர்குலைக்கும் நோக்குடன் சோதனைகளை ஏவி விடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதேநிலை தொடர்ந்தால் பா.ஜ.க.வால் மத்திய அரசாங்கத்தில் தொடர முடியாது என்றும், ஆட்சிக் கட்டிலில் இருந்து பா.ஜ.க.வை தூக்கி எறிய தம்மால் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் முக்கிய தலைவர்களை இணைத்து பாட்னாவில் பேரணி நடத்தப் போவதாகவும் லாலு பிரசாத் அறிவித்துள்ளார்.

218 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன