நேபாளத்தில் மழை வெள்ளத்தால் 58 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பல்லாயிரம் பேர்களில், சுற்றுலா சென்ற இந்தியர்கள் சுமார் 200 பேர் நாடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர். மழை வெள்ளத்தில் நேபாளத்தில் இதுவரை 58 பேர் உயிரிழந்த நிலையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.

ஆறுகளில வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தரைப்பாலங்கள் மூழ்கி சாலைப்போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன. நேபாளத்திற்கு சுற்றுலா சென்ற சுமார் 700 பேர் அங்குள்ள 100க்கும் மேற்பட்ட விடுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் பரிதவிக்கின்றனர். மின்சாரம், தொலைத்தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டிருப்பதால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன