நேபாளத்தில் தொடரும் கனமழை, கடும் நிலச்சரிவு

நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பான்கே ((Banke)) மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் உள்ள 2 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பன்ஞ்தார் ((Panchthar)) மற்றும் சிந்ஹூலி ((Sidnhuli )) மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்து விட்டதாகவும், நிலச்சரிவில் சிக்கி மாயமான 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் நேபாள அரசு தெரிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன