நேபாளத்தில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 49 பேர் பலி

நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. நேபாளத்தில் கனமழை பெய்தததால், 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. பலரும் குழந்தைகளை தூக்கிக் கொண்டு மரங்களில் ஏறி அமர்ந்தபடி, வெள்ளத்தில் இருந்து தப்பினர். வெள்ளம், மற்றும் நிலச்சரிவில் 49 பேர் உயிரிழந்த நிலையில், நீரில் இழுத்துச் செல்லப்பட்ட பலரின் கதி தெரியாமல் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேடான இடங்களை நோக்கி படகு மற்றும், யானைகள் மூலம் வெளியேறி வருகின்றனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணியும், தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன