Advertisement
Advertisement

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் கடையடைப்புப் போராட்டம்

நெல்லை மாநகராட்சியில் புதிய அரசாணையின்றி சொத்து வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேலப்பாளையம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறது.

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளுக்கான வரிவிதிப்பு பரிசீலனை செய்யப்படாத நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை சார்பில் புதிதாக வாய்மொழி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி வீடுகளுக்கான சதவீத அடிப்படையிலான வரியை கைவிட்டு, சதுர அடி வரிவிதிப்பை மாநகராட்சிகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய வரியால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் எனக் கூறி, நெல்லை மேலாப்பாளையம் பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் கடையைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போராட்டத்திற்கு ஆதரவாக ஆட்டோ மற்றும் வேன் ஓட்டுனர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன