நெல்லை நாடார் பள்ளியின் ரூ.500 கோடி சொத்து அபகரிப்பு முயற்சியைத் தடுத்ததால் தம்மீது புகார் – விக்ரமராஜா

நெல்லை நாடார் பள்ளியின் 500 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்கும் முயற்சியைத் தடுத்த ஆத்திரத்தில் தம்மீது பணம் கையாடல் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதனை சந்தித்து புகாரளித்தபின் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெல்லை, தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்க தலைவர் பத்மநாபன் தம்மீது அளித்த புகார் குறித்து விளக்கம் அளித்ததோடு, அவர்கள் மீது புகாரளித்துள்ளதாகத் தெரிவித்தார். பள்ளியில் தாம் தாளாளராகப் பணியாற்றியபோது 2015-16-ம் கல்வி ஆண்டில் கணக்குகள் முறையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார். மேலும், தம்மீது புகாரளித்த பத்மநாபன், சங்கத்தில் ஊழல் செய்ததற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாகவும், பள்ளியின் 500 கோடி ரூபாய் சொத்தை அபகரிக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்தியதால் புகாளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன