நெல்லையப்பர்- காந்திமதியம்பாள் திருக்கல்யாணம் மேளதாளங்களுடன் விமர்சையாக நடைபெற்றது

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இங்கு ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சிக் கொடுக்கும் வைபவம் நேற்று நடைபெற்றது.

திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி இன்று அதிகாலை, ஆயிரங்கால் மண்டபத்தில் அம்பாளும், சுவாமியும் எழுந்தருளினர். மாலை மாற்று வைபவம் நடந்தபின், அம்பாளுக்கு திருமாங்கல்யம் சாற்றப்பட்டு திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், நெல்லை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன