நெல்லுக்கு உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை: விவசாயிகள் புகார்

புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல்லுக்கு குறைந்த விலையே நிர்ணயிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மற்றும் அதையொட்டி தமிழக பகுதிகளில் தற்போது நெல் அறுவடை நடந்து வருகிறது. தட்டாஞ்சாவடியில் உள்ள புதுச்சேரி அரசின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்ய, விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளைக் கொண்டு செல்கின்றனர். ஆனால், நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, நேற்றைய விலையைவிட குறைவு என்று விவசாயிகள் ஏமாற்றத்துடன் கூறினர். செஞ்சி, கள்ளக்குறிச்சி மார்க்கெட்டுகளில் ஒரு மூட்டை 2,000 ரூபாய் வரை விலை போவதாகவும், ஆனால், தட்டாஞ்சாவடியில் ஒரு மூட்டைக்கு 1,700 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை மட்டுமே நிர்ணயிக்கப்பட்டதாகவும் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். எனவே, சில விவசாயிகள் விலையேற்றத்துக்காக காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன