நெடுஞ்சாலையில் வெடித்துச் சிதறும் சரக்கு வாகனம்

சீனாவில் ரசாயனப் பொருள்கள் ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று வெடித்துச் சிதறும் காட்சிகள் பதற வைத்துள்ளன.

ஹாங்ஜூவா மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் டிரக், நின்று கொண்டிருக்கும் வேனில் மோதுகிறது. இந்த அதிர்ச்சியில் நொடி நேரத்தில் டிரக்கின் பின்பகுதி வெடித்துச் சிதறுகிறது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. வெடித்து தாறுமாறாக ஓடிய டிரக்கின் ஓட்டுநர் எச்சரிக்கையுடன் நடந்து உயிர் தப்பினார். பற்றி எரிந்த தீ அணைக்கப்பட்டது. விசாரணையில், இரும்பு மற்றும் காகிதங்களுடன் பெயிண்ட் தயாரிப்புக்கான ரசாயனங்கள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!