நெடுஞ்சாலைத்துறையை உள்ளாட்சியின் கீழ் மாற்றக் கூடாது – தமிழக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம்

நெடுஞ்சாலைத்துறை சாலைகளை உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் மாற்றக் கூடாது என்று தமிழக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அச்சங்கத்தின் 62-வது பொதுக்குழுக் கூட்டம், அதன் தலைவர் வெங்கடாச்சலம் தலைமையில் திருச்சியில் நடைபெற்றது. இதில் 10 ஆண்டுகள் இளநிலை பொறியாளராக பணியாற்றியவர்களே உதவிக் கோட்ட பொறியாளராக பதவி உயர்வு பெற முடியும் என்பதை தெளிவாக குறிப்பிட்டு ஆணையினை விரைவில் வெளியிட கேட்டுக்கொள்வது, உள்ளிட்ட 15 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதுக்கடைகளுக்காக நெடுஞ்சாலைத்துறை சாலைகளை உள்ளாட்சி நிர்வாகத்தின் கீழ் மாற்றுவதற்கான கருத்துருவை தமிழக அரசு ஏற்க கூடாது என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை சாலைகளின் தரத்தை தங்களால் மட்டுமே பராமரிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன