நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்

நுகர்வோரை பாதுகாக்க சட்டத்திருத்தமசோதா நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரில் தாக்கலாகிறது. இச்சட்ட மசோதா நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் நுகர்வோர் விவகார நிலைக்குழு முன்பு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்தது.

தற்போதைய சட்டத்தை மாற்றி புதிய நடைமுறைகளை இச்சட்டத் திருத்த மசோதா கொண்டு வர உள்ளது. இதன்படி வாங்கும் பொருட்களில் சேதம் ஏற்பட்டிருந்தால் அதற்கான இழப்பீட்டை நிறுவனங்களிடமிருந்து நுகர்வோர் பெறுவதற்கான விதிகள் எளிமையாக்கப்பட உள்ளன.

இதே போல் குறிப்பிட்ட சேவையில் அதிருப்தி இருந்தாலும் வாடிக்கையாளர் புகார் தெரிவித்து, செலுத்திய தொகையை திரும்பப் பெற முடியும். இந்த மசோதாவுக்கு நிலைக்குழுவின் ஒப்புதல் கிடைத்ததும் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன