நீதிபதிகளைப் பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசின் அவசர சட்டத்திற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம்

நீதிபதிகளைப் பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசின் அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநில அரசு ஒரு அவசர சட்டம் இயற்றி உள்ளது.

அதில், ‘உரிய அனுமதி இன்றி, நீதிபதிகள், அரசு ஊழியர்கள் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கக்கூடாது என்றும், அந்த அனுமதி கிடைக்கும்வரை, ஊடகங்களும் அதுபற்றி செய்தி வெளியிடக்கூடாது’ என்றும் கூறப்பட்டுள்ளது.

இது, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களை பாதுகாக்கும் வகையிலும், ஊடகங்களை ஒடுக்கும் வகையிலும் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, நாம் 21ஆம் நூற்றாண்டில் இருப்பதையும், நாம் தற்போது 2017ஆம் ஆண்டில் இருக்கிறோம், 1817ஆம் ஆண்டில் அல்ல என்பதையும் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா நினைவில் இருத்த வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன