நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களை தமிழக அரசு நட்டாற்றில் விட்டுவிட்டது – ராமதாஸ்

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதாக வெளியாகும் செய்திகள் மூலம், மாணவர்களை தமிழக அரசு நட்டாற்றில் விட்டுவிட்டதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதாகக் கூறி மாணவர்களை நம்பவைத்துவிட்டு, முதுகில் குத்திவிட்டதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். நீட் தேர்வு, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட தமிழகத்தின் உயிர்நாடி பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால் மட்டுமே குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களில் ஆதரவு எனக்கூறி கோரிக்கைகளை நிறைவேற்றும் அரிய வாய்ப்புக்களை ஆடசியாளர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், ஆட்சியாளர்களின் தலைக்கு மேல் ஊழல் குற்றச்சாட்டுகள், வருமானவரி சோதனைகள், ஆட்சிக்கு ஆபத்து என ஏராளமான கத்திகள் தொங்கிக் கொண்டிருந்ததால், தங்கள் தலையில் கத்தி விழாமல் காப்பாற்றிக் கொள்ள தமிழக மாணவர்களை அரசு பலிகொடுத்திருப்பதை, மாணவர் சமுதாயம் மன்னிக்காது என்றும் ராமதாஸ் சாடியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன