நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் – நிர்மலா சீதாராமன்

நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு ஒத்துழைக்கும் என்றும், ஆனால் நிரந்தர விலக்களிக்க வாய்ப்பில்லை என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய, நிர்மலா சீத்தாராமன், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.

ஆனால் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து ஓராண்டுக்கு வேண்டுமானாலும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் என்று அவர் கூறியுள்ளார். இதற்காக கிராமப்புற மாணவர்கள் பாதிப்படைவார்கள் என்று கூறி நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதுவும், அரசு மருத்துவக்கல்லூரி இடங்களை நிரப்ப மட்டுமே நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்க முடியும்எ ன்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்றும் நிர்மலா சீதாராமன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன