நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்குமா? – அவசர சட்ட வரைவு மத்திய அரசிடம் இன்று தாக்கல்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்டமுன்வடிவு மத்திய அரசிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது.

நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்து ஓராண்டுக்கு வேண்டுமானால் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும் என்றார்

இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்கான சட்ட முன்வடிவு இன்று மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும் என அறிவித்தார். அவசர சட்ட முன்வடிவை வழங்க அரசு செயலாளர் நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். இன்று காலை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அவசர சட்ட முன்வரைவு தாக்கல் செய்யப்பட உள்ளதால், விரைவில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!