நிலுவை தொகை வழங்காத சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் எம்.சி.சம்பத் எச்சரிக்கை

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையினை வழங்காத தனியார் சர்க்கரை ஆலைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி கடலூரில் பெண்களை காப்போம் என்ற விழிப்புணர்வு பேரணியை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் துவக்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக முதலமைச்சர் தலைமையில் தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும், இந்த கூட்டத்தில் விவசாயிகளுக்கு சாதகமான முடிவை எடுக்கவில்லை என்றால் தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன