நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரிக்கை – சர்க்கரை ஆலைக்கு வந்த லாரிகள் சிறைப்பிடிப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே நிலுவை தொகை கோரி போராட்டம் நடத்திவரும் கரும்பு விவசாயிகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வந்த லாரியை சிறைப்பிடித்தனர்.

மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2 ஆண்டுகளில், கரும்புக்கான நிலுவைத் தொகை 31 கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்து விவசாயிகள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சனிக்கிழமை அன்று ஆலையில் இருந்து சர்க்கரை எடுத்துச் செல்ல வந்த லாரியை விவசாயிகள் சிறைப்பிடித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன