Advertisement
Advertisement

நிலவில் இருந்து மண் மாதிரியை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்ய திட்டம்

நிலவுக்குச் சென்று மண், கல் மாதிரிகளை சேகரித்து வருவதற்கான திட்டத்திற்காக ஜப்பானுடன் கை கோர்க்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது.

ஆசிய பசிபிக் மண்டல விண்வெளி ஆய்வு மைய மன்றக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் கிரண்குமார், ஜப்பானுடன் இணைந்து, நிலவுக்கு செல்வதற்கான ரோவர் ஆய்வூர்தி தயாரிக்கும் திட்டத்தை தொடங்க உள்ளதாகவும், இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

இதன்மூலம் நிலவில் மண், கல் மாதிரிகள் ஆகியவற்றை சேகரித்து பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜப்பான் உடனான உறவை, நிலவுக்கான திட்டத்துடன் மட்டும் முடித்து விடாமல், வானிலை மாற்றங்கள் தொடர்பான திட்டங்களிலும் தொடர விரும்புவதாக கிரண் குமார் தெரிவித்தார்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன