Advertisement

நிலச்சரிவில் 2 அரசுப் பேருந்துகள் சிக்கின – 17 பேர் பலி

இமாச்சலப் பிரசதேசத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாண்டி ((Mandi)) மாவட்டத்தில் மணாலியிலிருந்து சம்பா (Chamba) என்ற இடத்துக்கு சென்று கொண்டிருந்த 2 அரசுப் பேருந்துகள் கொட்ரூப்பி ((Kotroopi)) என்ற பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கின. நிலச்சரிவில் சிக்கிய பேருந்துகளில் இருந்து 17 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெறுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன