Advertisement

நிதி பற்றாக்குறையால் பேருந்து நிலையம் மாற்றப்படவில்லை – எம்.ஆர் விஜயபாஸ்கர் விளக்கம்

கரூர் நகர் பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம், நகராட்சியில் நிலவும் நிதி பற்றாக்குறையால் நிறைவேற்றப்படவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி – காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையும், நாகப்பட்டினம் – கடலூர் தேசிய நெடுஞ்சாலையும் கரூர் நகரை ஓட்டி சந்திப்பதால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள சாலைகளை அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை ஆய்வு செய்த பின்னர் பேசிய, அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், நகரின் மையப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் திட்டம் நகராட்சியில் போதிய நிதி இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன