Advertisement

நிதி நிறுவனம் மூலம் ரூ.2000 கோடிக்கு மேல் மோசடி

கன்னியாகுமரி அருகே இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக, தனியார் நிதி நிறுவனம் மீது கேரள போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கேரள எல்லை அருகே மத்தம்பாலை பகுதியில் நிர்மல் கிருஷ்ணா என்ற தனியார் நிதி நிறுவனத்தில், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் இருந்து, இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகத்தை சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கன்னியாகுமரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, நிதி நிறுவன இயக்குனர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். உரிமையாளர் நிர்மலன் என்பவரை தேடி வருகின்றனர். இந்நிலையில், கேரள போலீசாரிடம் அம்மாநிலத்தை சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர், அந்த நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்ததாக புகார் அளித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன