Advertisement

நார்வே நாட்டில் இமைப்பொழுதில் சாலைவிபத்து தவிர்ப்பு – சிறுவன் மீது மோதாமல் நிறுத்தப்பட்ட சரக்கு வாகனம்

நார்வே நாட்டில் பள்ளிக்குழந்தைகள் டிரக் ஒன்றில் மோதி விபத்தில் சிக்க இருந்தது, வினாடி நேரத்தில் தவிர்க்கப்பட்ட தருணம் அரங்கேறியுள்ளது. ஹெராட் ((Herad)) என்ற இடத்தில் பள்ளி முடிந்த பின்னர், பேருந்துகள் மூலம் தாங்கள் வசிக்கும் பகுதியில் உற்சாகமாக இறங்குகின்றனர் பிள்ளைகள். அங்கிருந்து வீட்டுக்குச் செல்ல, அவர்களில் இருவர் பேருந்தின் பின்புறம் வழியே சாலையைக் கடக்க முயல்கின்றனர்.

எதிர்த்திசையில் வரும் சரக்கு வாகனம் ஒன்று சிறுவனை மோதும் வேகத்தில் வந்து, நொடி நேரத்தில் நிறுத்தப்படுகிறது. பெரும் தவிப்பை ஏற்படுத்தும் இந்தக் காட்சிகள், அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியிருந்தன.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன