Advertisement

நாமக்கல் அருகே ஏரிக் கரையில் உடைப்பு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஏரியில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி வருவதால் 300 ஏக்கர் விவசாயி நிலங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராசிபுரத்தை அடுத்த வடுகம்முனியப்பம்பாளையத்தில் வெள்ளைக்குட்டை ஏரி உள்ளது. சுமார் 50 ஏக்கர் பரப்பளவிலான இந்த ஏரியின் மூலம், 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன. கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஏரி நிறைந்து வந்த நிலையில், இன்று அதிகாலையில் கரையில் உடைப்பு ஏற்பட்டு, பெருமளவு நீர் வீணானது. இதனால் ஏரி நீரின் மூலம் விவசாயம் செய்யலாம் என இருந்த விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன