நாட்டிலேயே மிக உயரமான கொடிக் கம்பத்தில் மீண்டும் தேசியக்கொடி

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பஞ்சாப்பில் 360 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. வாகா எல்லைக்கு மிக அருகில் உள்ள அட்டாரி என்ற இடத்தில் பாகிஸ்தானிலிருந்து பார்த்தால் தெரியும் அளவுக்கு, நாட்டிலேயே மிக உயரமான இந்த தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 120 அடி நீளம், 80 அடி அகலம் கொண்ட கொடி, முதல்முறையாக கடந்த மார்ச் மாதம் ஏற்றப்பட்டிருந்தது. ஆனால், பலத்த காற்றினால் கிழிந்துவிடும் சங்கடம் நேரிட்டதால், ஏப்ரல் மாதத்திலிருந்து ஏற்றப்படவில்லை. இந்நிலையில், நாளை கொண்டாடப்பட உள்ள சுதந்திர தின விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், இந்த பிரம்மாண்டமான தேசியக்கொடி மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன