குடியரசுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வரும் 20ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் பீகார் மாநில முன்னாள் ஆளுநர் ராம்நாத் கோவிந்த்தும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் 543 பேர், மாநிலங்களவை உறுப்பினர்கள் 233 பேர் மற்றும் அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் 4,120 பேர் தேர்தலில் வாக்களிக்க தகுதியுடையவர்கள். மொத்த வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 98 ஆயிரத்து 903 ஆகும்.

ஒரு எம்பிக்கான வாக்கின் மதிப்பு 708. எம்எல்ஏவின் வாக்கு மதிப்பு அந்தந்த மாநில மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப மாறுபடும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!