நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடரை அமைதியாக நடத்த பிரதமர் கோரிக்கை

நாடாளுமன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைப்புத் தருமாறு எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கட்கிழமை தொடங்கியது.

மறைந்த உறுப்பினர்களான வினோத் கன்னா மற்றும் அனில் மாதவ் தவேவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட பின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, ஜிஎஸ்டி வரி மூலம் புதிய சகாப்தத்தை படைத்திருப்பதாக கூறினார்.

வளர்ச்சி, வலிமை இரண்டும் ஒன்றாக இணைந்திருப்பதாக ஜிஎஸ்டிக்கு மோடி புதிய விளக்கம் தந்தார். மேலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்த எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று மோடி வேண்டுகோள் விடுத்தார். தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில் ஆரோக்கியமான விவாதம் நடத்த தயாராக இருப்பதாகவும் மோடி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!