நாகை குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி எண்ணெய் குழாயில் கசிவு

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே ஓ.என்.ஜி.சி.நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த மாதிரிமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 2 எண்ணெய்க் கிணறுகளை அமைத்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது.

அங்கிருந்து குத்தாலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு பைப் லைன் மூலம் எரிவாயு மற்றும் எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனிடையே மாதிரிமங்கலம் எம்.ஜி.ஆர்.நகர் அருகே எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, எண்ணெய் கசிந்தது.

4வது முறையாக உடைப்பு ஏற்பட்டுள்ள நிலையில், எண்ணெய் எடுத்துச் செல்லும் குழாயை மாற்றியமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன