நாகை அருகே ரூ. 3 கோடி மதிப்புள்ள 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

நாகை அருகே 3 கோடி ரூபாய் மதிப்புள்ள 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வேதாரண்யத்தில் இருந்து நாகை, காரைக்கால் வழியாக சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வாஞ்சூர் அருகே மத்திய நுண்ணறிவுப் பிரிவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அதில் 10 கிலோ 800 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் இருந்த அ.தி.மு.க. பிரமுகரும், நாகை மாவட்டம் விழுந்தமாவடி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான மகாலிங்கம் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன