நாகாலாந்தில் நிலச்சரிவால் போக்குவரத்து பாதிப்பு சீரமைக்கும் பணி தீவிரம்

நாகாலாந்து மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் தேசிய நெடுஞ்சாலை முற்றிலும் சேதமடைந்தது. வடகிழக்கு மாநிலங்களில் தற்போது கனமழை பெய்து வருவதால், லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தலைநகர் கோஹிமா அருகே விஷ்வேமா பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 70 மீட்டர் நீளத்திற்கு சாலை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விஷ்வேமா பகுதி மக்கள் தற்காலிக நடைபாதை ஒன்றை உருவாக்கி உதவிப்பொருட்களை வழங்கி வருகின்றனர். சாலையை சீரமைக்கும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன