நவிமும்பையில் உள்ள பரோடா வங்கியில் 50 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி கொள்ளை

மும்பையில் 25 அடி தூரத்துக்கு சுரங்கம் தோண்டி வங்கியில் இருந்து 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நவி மும்பை பகுதியில் சான்பாடா என்ற இடத்தில் உள்ள பரோடா வங்கி அருகே உள்ள ஒரு கடையை ஆறு மாதத்துக்கு முன்பு வாடகைக்கு எடுத்த கொள்ளையர்கள், அதில் மளிகைக் கடை நடத்திக்கொண்டே வெளியில் தெரியாத வகையில் சிறிது சிறிதாக வங்கியின் பெட்டக அறையை நோக்கி சுரங்கம் தோண்டியது தெரியவந்துள்ளது.

நேற்று வங்கியைத் ஊழியர்கள் திறந்தபோது பெட்டக அறையில் சுமார் 30 பெட்டகங்கள் உடைக்கப்பட்டு பணம் நகை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. முதல் கட்டமாக 2 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ள போலீசார் பெட்டக உரிமையாளர்களிடம் விசாரணை நடத்திய பிறகே கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் முழு மதிப்பு தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர். கடையை வாடகைக்கு எடுத்த கேன பிரசாத் என்பவர் உள்ளிட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன