Advertisement
Advertisement

நவம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது குளிர்காலக் கூட்டத் தொடர்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் அடுத்த மாதம் 21 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 9 ஆம் தேதி நடைபெறும் என்றும், அதன் முடிவுகள் டிசம்பர் 18 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது.

இந்நிலையில், இமாசலப் பிரேதச தேர்தல் முடிந்த கையோடு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரைக் கூட்ட நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. குளிர்காலக் கூட்டத்தொடர் 3 வாரங்கள் மட்டுமே நடைபெறும் என்றும், அடுத்த ஒரு மாதத்திலேயே, அதாவது ஜனவரியின் மூன்றாவது வாரத்திலேயே பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன