நவம்பர் 20ஆம் தேதி சர்வதேச தலைவர்கள் பங்கேற்கும் மாநில சுயாட்சியை மீட்கும் மாநாடு – வைகோ

மாநில சுயாட்சியை மீட்கும் மாநாடு நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும், அதில் சர்வதேசத் தலைவர்கள் பங்கேற்பார்கள் எனவும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். தஞ்சையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் பேசிய அவர், திராவிட இயக்கம் தொடங்கி நூறாண்டுகள் ஆனதைக் குறிக்கும் வகையில் இந்த மாநாடு நடைபெற இருப்பதாக குறிப்பிட்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர் இடையூறு செய்ததால் அவரை வெளியேற்றச் சொன்னார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன