நலத்திட்டங்களில் முறைகேடு, மோசடிகளை தடுக்க ஆதார் உதவியுள்ளது – நந்தன் நிலேகனி

நலத்திட்டங்களில் முறைகேடு, மோசடிகளை தடுக்க உதவியதன் மூலம், அரசுக்கு 58 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை ஆதார் திட்டம் சேமித்துக் கொடுத்திருப்பதாக நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.

ஆதார் ஆணையத்தின் முன்னாள் தலைவரான நந்தன் நிலேகனி, வாஷிங்டனில் உலக வங்கி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் வளர்ச்சிக்கான டிஜிட்டல் பொருளாதாரம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்தியாவில் ஆதார் திட்டத்தில் நூறு கோடிக்கும் அதிகமானவர்கள் பதிவு செய்துகொண்டிருப்பதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் நலத்திட்டங்களில் போலிகள் களையப்பட்டு, 58 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு மிச்சப்பட்டிருப்பதாகவும் நிலேகனி கூறினார். 50 கோடிக்கும் மேற்பட்டவர்களின் ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதாகவும், வங்கிக் கணக்குகளுக்கு அரசு 78 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை மின்னணு முறையில் பரிமாற்றம் செய்திருப்பதாகவும் நிலகேணி தெரிவித்தார். உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் நூறு கோடி பேர் மொபைல் மூலம் மின்னணு பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும் என்றும் நந்தன் நிலேகனி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன