நர்மதை ஆற்றில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

குஜராத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டுப்பட்டுள்ள, ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையான சர்தார் சரவோர் அணையை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். குஜராத்தில் ((kevadia)) கெவாடியா என்ற இடத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையானது, 535 அடி உயரம் கொண்டது.

1961ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ஜவஹர் லால் நேரு, அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய நிலையில், கடந்த 1987ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின. ஆனால், பல்வேறு தடைகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால், நிறைவடைந்துள்ளன.

ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையுமான சர்தார் சரவோர் அணையில் மலர்களை தூவி, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துவைத்தார். இவ்விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உலகிலேயே 2ஆவது மிகப்பெரியதும்,நாட்டிலேயே மிகப்பெரிய அணையான சர்தார் சரவோர் அணையில் 47 லட்சம் கன மீட்டர் நீரை தேக்கி வைக்க முடியும்.

இந்த அணையின் மூலம் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சுமார் 2 லட்சத்து 46 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்படுகிறது. இந்த அணையில் ஆயிரத்து 200 மெகா வாட் திறன் கொண்ட ஒரு மின் உற்பத்தி நிலையமும், 250 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடி, முன்னதாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று, தாயாரிடம் ஆசி பெற்றார்.
குஜராத்தில் ((kevadia)) கெவாடியா என்ற இடத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையானது, 535 அடி உயரம் கொண்டது. 1961ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ஜவஹர் லால் நேரு, அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய நிலையில், கடந்த 1987ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கின.

ஆனால், பல்வேறு தடைகள் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் உச்சநீதிமன்றத்தின் உத்தரவால், நிறைவடைந்துள்ளன. ஆசியாவிலேயே மிகப்பெரிய அணையுமான சர்தார் சரவோர் அணையில் மலர்களை தூவி, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்துவைத்தார்.

இவ்விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள உலகிலேயே 2ஆவது மிகப்பெரியதும்,நாட்டிலேயே மிகப்பெரிய அணையான சர்தார் சரவோர் அணையில் 47 லட்சம் கன மீட்டர் நீரை தேக்கி வைக்க முடியும்.

இந்த அணையின் மூலம் குஜராத், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சுமார் 2 லட்சத்து 46 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்படுகிறது. இந்த அணையில் ஆயிரத்து 200 மெகா வாட் திறன் கொண்ட ஒரு மின் உற்பத்தி நிலையமும், 250 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு மின் உற்பத்தி நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடும் பிரதமர் மோடி, முன்னதாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று, தாயாரிடம் ஆசி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *