நர்மதை ஆற்றில் கட்டப்பட்ட பிரமாண்டமான சர்தார் சரோவர் அணை இன்று திறப்பு

நர்மதா நதி மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். கடந்த 1961ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டது சர்தார் சரவோர் அணை.

நர்மதா நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி பல லட்சம் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டம் 56 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. பணிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் சர்தார் சரோவர் அணை பிரதமர் மோடியால் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

இது குறித்து தமது டிவிட்டரில் பதிவு செய்துள்ள மோடி பல லட்சம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை இத்திட்டம் பூர்த்தி செய்யும் என்று தெரிவித்துள்ளார். கேவடியா பகுதியில் விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு நேற்றிரவு முதலே அப்பகுதியில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

அண்மையில் இந்த அணையின் நீர்மட்டம் 138 புள்ளி 68 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 4 புள்ளி 73 மில்லியன் கனமீட்டர் நீரை இது சேமிக்கக்கூடியது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரமதர் கலந்துக் கொள்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!