நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் வேறுபாடு தெரியாமல் முதலமைச்சர் பேசுகிறார் – மு.க.ஸ்டாலின்

நம்பிக்கை வாக்கெடுப்புக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கும் வேறுபாடு தெரியாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவதாக, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுகவிற்குள் நடைபெறும் சண்டைக்குள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை என்றார். அதிமுக-வில் பிளவுக்கு பாஜக காரணமா இல்லையா என்பதைவிட, நீட், இந்தி திணிப்பு போன்ற பிரச்சனைகளில் அதிமுக அரசு அடிபணிந்து செல்வதற்கு பாஜகதான் காரணம் என்று அவர் குற்றம்சாட்டினார். ஊழல், கிடைத்ததை சுருட்ட முயற்சி என அதிமுகவினரே ஒருவரையொருவர் மாறி மாறி குற்றம்சாட்டுகின்றனர் எனவும், யார் அத்தகையவர்கள் என்பதை மக்கள் முடிவுசெய்வார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுவதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக திமுக உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

எடப்பாடி தொகுதியில் மட்டுமல்ல அனைத்து தொகுதிகளில் திமுகவினரால் தூர்வாரப்பட்ட ஏரிகளை பார்வையிடப் போவதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன