நமாஸ், பஜனை, தியானம் எது செய்தாலும் நீர் பருகுபவர்கள் நதிகளை மீட்க ஆதரவளிக்க வேண்டும் – சத்குரு

நமாஸ் செய்பவராக இருந்தாலும், பஜனை பாடுபவராக இருந்தாலும், தியானம் செய்பவர்களாக இருந்தாலும், நீரைப் பருகுபவர்கள் நதிகளை மீட்பதற்கு ஒத்துழைக்க வேண்டும் என ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நதிகளை மீட்போம் என்ற 30 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக நேற்று அவர் ஐதராபாத் சென்றார். அங்கு சியாசத் உருது மற்றும் கன்ஃபெடரேசன் தன்னார்வல அமைப்பு இணைந்து நடத்திய கூட்டத்தில் சத்குரு உரையாற்றினார்.

அப்போது அக்டோபர் 2-ம் தேதிக்குப் பிறகு நதிகளை மீட்போம் இயக்கத்தின் திட்டப் பரிந்துரை வெளியிடப்படும் என்றும், அப்போது அனைவரது கருத்துக்கள், பரிந்துரைகள் வரவேற்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தெலங்கானா துணை முதலமைச்சர் முகம்மமு மஹ்மூத் அலி, இஸ்லாமிய தலைவர் மௌலானா சாதிக் மொஹிதீன் பாஹீம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன