Advertisement

நண்பரின் ஒன்றரை வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன் கைது

டெல்லியில் நண்பரின் ஒன்றரை வயதுப் பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 21 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குழந்தையின் தாய் தனது கணவரின் நண்பரிடம் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு வேலைக்குச் சென்றதாக கூறப்படுகிறது. வேலை முடிந்து வந்த குழந்தையின் தாய், குழந்தை அழுதுகொண்டிருந்ததையும், அந்தரங்க உறுப்புகளில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்ததையும் கண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை உறுதி செய்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் அந்த கொடூரனை கைது செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன