சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கருணாஸ் மற்றும் அவரது நண்பர்கள் தகராறு

சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் தகராறு செய்ததாக புகார் எழுந்துள்ளது.கருணாஸ் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த சனிக்கிழமையன்று சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளனர்.
அப்போது பரணிதரன் என்பவருக்கும் கருணாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கருணாசின் நண்பர்கள் ஆறு பேர் தாக்கியதில், பரணிதரன் காயமடைந்தார்.அவர் அளித்த புகாரின் பேரில் கருணாசின் நண்பர்கள் ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகலப்பின் போது கருணாஸ் இல்லை என்பதால் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

நட்சத்திர விடுதியில் அவர்கள் மதுபோதையில் இருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன