நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தன்னை சிக்கவைக்க நடிகை மஞ்சு வாரியர் சதி – திலீப் புதிய குற்றச்சாட்டு

நடிகை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் தான் சிக்கவைக்கப்பட்டதில் தனது முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சுவாரியன் சதி இருப்பதாக நடிகர் திலீப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நடிகை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள திலீப் கேரள உயர்நீதிமன்றத்தில் இரண்டாது முறையாக ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், நடிகை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட விவகாரத்தில் தனக்கு துளியளவு கூட தொடர்பு இல்லை என்று திலீப் கூறியுள்ளார்.

மேலும் நடிகையை காரில் கடத்தியதாக கூறப்படும் பல்சர் சுனில் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகை வழக்கை விசாரித்து வரும் அதிகாரி சந்தியா தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று திலீப் கூறியுள்ளார்.

மேலும் நடிகை பாலியல் துன்புறுத்தல் நடைபெற்றதை தொடர்ந்து நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பேசிய மஞ்சு வாரியர், மறைமுகமான தன் மீது குற்றச்சாட்டு சுமத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மஞ்சு வாரியரும் விசாரணை அதிகாரி சந்தியாவும் இணைந்து தனக்கு எதிராக சதி செய்து நடிகை வழக்கில் சிக்க வைத்துள்ளதாகவும் திலீப் கூறியுள்ளார். தனக்கு எதிராக இயக்குனர்கள் வி.ஏ ஸ்ரீகுமார் மேனன், லிபர்டி பசீர் ஆகியோரும் சதி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் தான் சிறையில் அடைக்கப்பட தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியரே காரணம் என்று திலீப் கூறியுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன