நடிகர் விஷாலிடம் சிக்கியது தமிழ் கன் அட்மின் அல்ல

சென்னையில் புதிய படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ததாக விஷால் குழுவினர் பிடித்து கொடுத்த கவுரி சங்கர் என்பவர் தமிழ் கன் இணையதள அட்மின் அல்ல என்றும் தமிழ் கன் டாட் இன் என்ற பெயரில் போலியான இணையதளம் நடத்தியவர் என்பதும் தெரியவந்துள்ளது. புதிய படங்களை இணையத்தில் பதிவு செய்ததோடு, சிடியிலும் பதிவு செய்து விற்றதாக வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்யப்பட்ட கவுரி சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கவுரி சங்கர் 30க்கும் மேற்பட்ட ஆபாச இணையதளங்களுக்கு அட்மினாக செயல்பட்டு வருவது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன